Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவிலுள்ள எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்

அமெரிக்காவிலுள்ள எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்

By: Nagaraj Sun, 12 Mar 2023 7:08:30 PM

அமெரிக்காவிலுள்ள எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்

அமெரிக்கா: ஆய்வில் வெளியான தகவல்... அமெரிக்காவிலுள்ள எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்களும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் எலிகளிடம் சார்ஸ் கோவிட்-2 (SARS-CoV-2) வகையைச் சேர்ந்த ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் ஆகிய வைரஸ்கள் இருப்பதாகவும், ஆய்வு செய்யப்பட்ட 79 எலிகளில் 13 எலிகளிடம் கொரோனா வைரஸ் தாக்கத்தை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

biology,researchers,mice,corona,impact,study ,உயிரியல், ஆய்வாளர்கள், எலிகள், கொரோனா, தாக்கம், ஆய்வு

எனினும், எலிகளிடமிருந்து மனிதருக்கு கொரோனா பரவியதா என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

எலிகளை எவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கியது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாகவும் உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|