Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலி வங்கி பிணையப்பத்திரம் வழங்கிய 2 பேருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை

போலி வங்கி பிணையப்பத்திரம் வழங்கிய 2 பேருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை

By: Nagaraj Fri, 14 Oct 2022 08:53:06 AM

போலி வங்கி பிணையப்பத்திரம் வழங்கிய 2 பேருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை

தஞ்சாவூர்: சுனாமி நிவாரண திட்டப்பணிகளில் போலியான வங்கி பிணையப் பத்திரங்கள் வழங்கியது தொடர்பாக சிபிசிஐடி வழக்கில் ஒப்பந்ததாரர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து திருவையாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட சுனாமி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய பெ.ரேணுகாதேவி கடந்த 11.5.2009 ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில், சுனாமி நிவாரண திட்டங்களின் கீழ் வேலைகளை மேற்கொள்ள பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டையைச் சேர்ந்த பார்வதி, ரவி ஆகிய இரு ஒப்பந்தகாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

thiruvaiyaru,court,judgment,contractors,imprisonment ,திருவையாறு, கோர்ட், தீர்ப்பு, ஒப்பந்ததாரர்கள், சிறை தண்டனை

இருவரும் அரசின் வழிகாட்டுதலின்படி அரசுக்கு வங்கியிடமிருந்து பெறப்பட்டு சமர்பிக்க வேண்டிய பிணையப் பத்திரங்களில், போலியான வங்கி பிணையப் பத்திரங்களை ஒப்படைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 8.7.2009 அன்று இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) தஞ்சாவூர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி இவ்வழக்கில் 31.12.2009 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பார்வதி, ரவி ஆகிய இரு ஒப்பந்ததாரர்களுக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாத காலம் சிறை தண்டனையும் விதித்து திருவையாறு நீதிபதி தீ்ர்ப்பளித்தார்.

Tags :
|