Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த புதிய லிங்க் வாயிலாக பயனர்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைகலாம்

இந்த புதிய லிங்க் வாயிலாக பயனர்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைகலாம்

By: vaithegi Wed, 07 Dec 2022 1:36:28 PM

இந்த புதிய லிங்க் வாயிலாக பயனர்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைகலாம்

சென்னை: தமிழகத்தில் மின் பயனர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின் பயனர்களுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்தந்த பகுதி மின் வளாக அலுவலகத்தில் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆன்லைன் வாயிலாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முற்படும் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பயனர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

users,link,power connection no ,பயனர்கள் ,லிங்க் ,மின் இணைப்பு எண்

இது குறித்து ஆய்வு செய்த தமிழக மின் வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக பயனர்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது பழைய லிங்க் அப்டேட் செய்யப்பட்டு புதிய link ஆன https://adhar.tnebltd.org/Aadhaar/ என்பதில் பயனர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம்.

Tags :
|
|