Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்; 6 மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும்

14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்; 6 மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும்

By: Nagaraj Mon, 25 May 2020 10:50:44 AM

14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்; 6 மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும்

6 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்... 14 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:

கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், வேலுார் ஆகிய, 14 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய மழை பெய்யலாம். மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை ஆகிய, ஆறு மாவட்டங்களிலும், திருத்தணியிலும், அதிகபட்சமாக, 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.

thunderstorms,tamil nadu,sun,low,down ,இடியுடன் மழை, தமிழகம், வெயில், குறைந்தது, சரிந்துள்ளது


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில், ஒரு வாரமாக வீசிய வெப்பக்காற்று, நேற்று முதல் குறைந்துள்ளது. பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியசுக்கு கீழே சரிந்துள்ளது. சில இடங்களில் வழக்கமான கோடை வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் அதிகபட்சமாக, திருச்சியில் 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இன்றைய வெயில், அதிகபட்சமாக, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|