Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

By: Monisha Sat, 27 June 2020 6:39:10 PM

11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுவை, காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளையும் நாளை மறுதினமும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்கக்கூடும்.

tirunelveli,kanyakumari,rain,meteorological center,convection ,திருநெல்வேலி,கன்னியாகுமரி,மழை,வானிலை ஆய்வு மையம்,வெப்பச்சலனம்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி, குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|