Advertisement

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Mon, 06 July 2020 2:41:35 PM

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளதாவது:-

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

weather,rain,cloudy,strong winds,fishermen ,வானிலை,மழை,மேகமூட்டம்,பலத்த காற்று,மீனவர்கள்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி, தேவலாவில் 9செ.மீ., நடுவட்டம் 8செ.மீ., கூடலூர் பஜாரில் 7செ.மீ., அவலாஞ்சியில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அதேபோல் அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|