Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: Nagaraj Thu, 04 June 2020 10:54:37 AM

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

convection,rain,chance,notification,weather center ,வெப்பச்சலனம், மழை, வாய்ப்பு, அறிவிப்பு, வானிலை மையம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்: (சென்டிமீட்டரில்)
தேவலா (நீலகிரி) 9, சித்தார் (கன்னியாகுமரி) 8 பெருஞ்சானி (கன்னியாகுமரி) புத்தன் அணைக்கட்டு (கன்னியாகுமரி) தலா 6, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) சிவலோகம் (கன்னியாகுமரி) நாவலூர் (திருச்சிராப்பள்ளி) தலா 5. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|