Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

By: Nagaraj Fri, 24 Feb 2023 11:19:16 AM

சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

மாத்தறை: இடியுடன் கூடிய மழை... மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lightning,impacts,impacts,high winds,weather,rain ,மின்னல், தாக்கங்கள், பாதிப்புகள், பலத்தகாற்று, வானிலை, மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Tags :