Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய் லாமா பிறந்த நாளை முன்னிட்டு கிரண் ரிஜ்ஜு வாழ்த்து

திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய் லாமா பிறந்த நாளை முன்னிட்டு கிரண் ரிஜ்ஜு வாழ்த்து

By: Karunakaran Tue, 07 July 2020 2:56:13 PM

திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய் லாமா பிறந்த நாளை முன்னிட்டு கிரண் ரிஜ்ஜு வாழ்த்து

திபெத்தின் புத்த மதத் தலைவராக தலாய் லாமா உள்ளார். இந்நிலையில் அவர் தனது 85-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புத்த மதத் தலைவர் தலாய் லாமா பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு தலாய் லாமாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதுதொடர்பாக கிரண் ரிஜ்ஜுதனது ட்விட்டர் பக்கத்தில், 14-வது தலாய் லாமாவின் 85-வது பிறந்த நாளில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எனது ஆழ்ந்த மரியாதை, பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களை வழங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

tibet,buddhist leader,dalai lama,kiran rizju ,திபெத், புத்த தலைவர் தலாய் லாமா, கிரண்  ரிஜ்ஜு

மேலும் அவர், தலாய் லாமா மதிப்புகள் மற்றும் லட்சியங்கள் முழு மனிதகுலத்திற்கும் அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தை நோக்கி வழிகாட்டும் ஒளி என்று கூறியுள்ளார். மத்திய மந்திரிகளில் கிரண் ரிஜ்ஜு மட்டுமே தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். வேறு எவரும் தெரிவிக்கவில்லை.

இதற்கு காரணம் லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாகும். இந்த சூழ்நிலையில் தலாய் லாமாவுக்கு மத்திய மந்திரி ஒருவர் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags :
|