Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமானங்களின் எண்ணிக்கை உயர திட்டமிட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பு

விமானங்களின் எண்ணிக்கை உயர திட்டமிட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பு

By: vaithegi Wed, 25 Oct 2023 5:56:55 PM

விமானங்களின் எண்ணிக்கை உயர திட்டமிட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பு

இந்தியா:விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ... இந்தியாவில் பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் பேருந்து, ரயில்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிடுவதால் பெரும்பாலான பயணிகள் விமானங்களில் பயணம் செய்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பண்டிகை காலங்களில் கூடுதல் விமான சேவை ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்த வகையில், விமானப் போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு வாரமும் 118 விமான நிலையங்களில் இருந்து 23,732 விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

ticket fees,flights,passengers ,டிக்கெட் கட்டணம் ,விமானங்கள் ,பயணிகள்


கடந்த ஆண்டு 21,941 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு கூடுதலாக 8.16 % கூடுதல் விமானம் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இண்டிகோ நிறுவனம் 13,119 உள்நாட்டு விமானங்களை இயக்கி வரும் நிலையில் இந்தாண்டு 30.08 சதவீதம் அதிகமாக இயக்கவுள்ளது.

இதனை அடுத்து இவ்வாறு, அதிரடியாய் விமானங்களின் எண்ணிக்கையை விமானப் போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டு அமைப்பு அதிகரித்திருக்கும் நிலையில் விமான டிக்கெட் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :