Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலின் செப்டம்பர் மாத கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் செப்டம்பர் மாத கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு

By: vaithegi Mon, 27 June 2022 10:28:37 AM

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் செப்டம்பர் மாத கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி: செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள், இன்று மாலை 4 மணிக்கு, ஆன்-லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்டுகளை, பக்தர்கள் வழக்கம் போல் இன்று மாலை 4 மணி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம்
தெரிவித்துள்ளது.

tickets,tirupati ezhumalayan temple ,டிக்கெட்டுகள் ,திருப்பதி ஏழுமலையான் கோவில்

சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு அது பற்றிய தகவல் அவர்களுடைய செல்போனுக்கு குறுஞசெய்தியாக வந்து சேரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :