Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக் டாக்கிற்கு எதிரான டொனால்டு டிரம்பின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர டிக் டாக் முடிவு

டிக் டாக்கிற்கு எதிரான டொனால்டு டிரம்பின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர டிக் டாக் முடிவு

By: Karunakaran Sun, 23 Aug 2020 5:38:36 PM

டிக் டாக்கிற்கு எதிரான டொனால்டு டிரம்பின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர டிக் டாக் முடிவு

அமெரிக்கா -சீனா இடையே தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்க-சீன மோதல் உச்சத்தை அடைந்தது. மேலும், கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

இந்நிலையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததால், டிக்டாக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும்.

tik tok,donald trump,decision,case ,டிக் டோக், டொனால்ட் டிரம்ப், முடிவு, வழக்கு

இந்நிலையில் கடந்த 6-ந்தேதி அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக் டாக் அச்சுறுத்தலாக உள்ளது. அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவல்களை சேகரித்து பிளாக்மெயில் செய்யவும், உளவு பார்க்கவும் இந்த செயலியை சீனாவால் பயன்படுத்த முடியும். இதனால், 45 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு அதை விற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து டிக் டாக் நிர்வாகம் நீதிமன்றத்தை நாட உள்ளது. டிரம்பின் நிர்வாகத்தை ஏறக்குறைய ஓராண்டாக தொடர்புகொள்ள முயற்சித்து தோற்றுப்போனோம். உண்மை குறித்து அவர்கள் கவனம் செலுத்தவில்லை. எங்கள் நிறுவனம் மற்றும் பயனர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நீதித்துறையை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று டிக் டாக் நிர்வாக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Tags :