Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன

ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன

By: vaithegi Fri, 22 July 2022 5:46:04 PM

ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இது 97.34 சதவீதம் ஆகும்.

மேலும் சுமார் 4 கோடி பேர் ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தவில்லை. மார்ச் 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது.

vaccination,free of charge ,தடுப்பூசி ,இலவசமாக

இதை தொடர்ந்து 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் சிறப்பு முகாம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இதனை அடுத்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 90 சதவீதம் பேர் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளனர்.

Tags :