Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எஸ்எஸ்சி தேர்விற்கான காலஅட்டவணை.. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

எஸ்எஸ்சி தேர்விற்கான காலஅட்டவணை.. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

By: vaithegi Mon, 11 July 2022 7:36:50 PM

எஸ்எஸ்சி தேர்விற்கான காலஅட்டவணை.. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

இந்தியா: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டிற்கான எஸ்எஸ்சி தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பட்டதாரி (நிலை-1)-க்கான தேர்வு குறித்தான அறிவிப்பு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒருங்கிணைந்த மேல்நிலை(10+2) (முதல் நிலை) தேர்வு குறித்தான அறிவிப்பு நவம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், டிசம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எழுத்துத் தேர்வு ஜனவரி-பிப்ரவரி 2023 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இளநிலை பொாறியாளர் தேர்வு குறித்தான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், செப்டம்பர் வரை விண்ணப்பிக்கலாம் என்றும், நவம்பர் மாதத்தில் எழுத்து தேர்வு நடைபெறும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், காவலர் நிலையிலான பணி குறித்தான அறிவிப்பு டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், ஜனவரி 19 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும், மார்ச்-ஏப்ரல் 2023 மாதங்களில் எழுத்து தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

examination board,time table ,தேர்வாணையம் ,காலஅட்டவணை

சார்-ஆய்வாளர் பணி குறித்தான அறிவிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, என்றும் நிலை சி மற்றும் டி தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்விற்கு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பன்னோக்கு(தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி 12 2023 ல் வெளியிடப்படும் எனவும், பிப்ரவரி 24 ஆம் தேதி வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும், ஏப்ரல் – மே மாதங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :