Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கோட்டை, மதுரை, கொல்லம் வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்

செங்கோட்டை, மதுரை, கொல்லம் வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்

By: vaithegi Sun, 07 May 2023 12:48:21 PM

செங்கோட்டை, மதுரை, கொல்லம் வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பாக பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது சில ரயில்கள் செல்லும் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றப்பட்டுவுள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , செங்கோட்டை, மதுரை, கொல்லம் ஆகிய ரயில்கள் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

sengottai,madurai,kollam,train , செங்கோட்டை, மதுரை, கொல்லம் , ரயில்

எனவே அதன் படி செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் ரயில் (06664) பிற்பகல் 12 .10 மணிக்கு கிளம்பும். இடையில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு 12 .59 மணிக்கு வந்து சேரும். அடுத்தாக சிவகாசி ரயில் நிலையத்திற்கு 1 .48 நிமிடங்களுக்குள் வந்து சேரும். மேலும் மதுரை ரயில் நிலையத்திற்கு 3.35 மணிக்கு வந்தடையும்.

அதை தொடர்ந்து செங்கோட்டை – கொல்லம் ரயில் (06659) செங்கோட்டையிலிருந்து 12.35 மணிக்கு கிளம்பி கொல்லம் ரயில் நிலையத்திற்கு மலை 4.35 மணிக்கு வந்தடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|