Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய ரயில்வே துறையில் பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றம்

இந்திய ரயில்வே துறையில் பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றம்

By: vaithegi Thu, 08 June 2023 3:03:26 PM

இந்திய ரயில்வே துறையில் பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றம்

இந்தியா: வருகிற ஜூன் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரைக்கும் இந்திய ரயில்வே துறையில் பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்ட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீடு ...... இந்திய ரயில்வே துறையில் ரயில் சேவை துண்டிப்பு, நேரம் மாற்றியமைப்பது போன்ற ஏதேனும் மாற்றங்கள் அதனை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் ரயிலில் வருகிற ஜூன் 10 முதல் 2023 அக்டோபர் 31 வரை சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதாவது, எந்தெந்த ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தான பட்டியலை தற்போது காணலாம்.

அதாவது, ரயில் எண் 12617 கொண்ட எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து ஹஸ்ரத் நிஜாமுதீன் டைனிக் மங்களா லட்சத்தீவு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 3.15க்கு கிளப்புவதற்கு பதிலாக 10.10 மணிக்கு புறப்படும் எனவும், ரயில் எண் 12618 கொண்ட ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் இருந்து எர்ணாகுளம் சந்திப்பை 10.25 மணிக்கு சென்றடையும் என்றும்,

indian railways,time change of trains ,இந்திய ரயில்வே துறை, ரயில்களின் நேரம் மாற்றம்

இதனை அடுத்து ரயில் எண் 12431 கொண்ட திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் 4 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் எனவும், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து 14.40 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ரயில் எண் 12432 கொண்ட ரயில் ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி 15 நிமிடங்கள் தாமதமாக இயங்கும் எனவும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சென்ட்ரலில் 01.50 மணிக்கு சென்றடையும் என்றும், ரயில் எண் 22149, ரயில் எண் – 22655 ஆகிய ரயில்கள் 3 மணி நேரம் முன்னதாக புறப்படும் எனவும், ரயில் எண் – 12217 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும் என்றும், ரயில் எண் – 12483 கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு முன்னதாக புறப்படும் என்றும், ரயில் எண் – 20923 ஹம்சஃபர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 2 மணி 45 நிமிடங்களுக்கு முன்பு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :