Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி முதல் தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இந்த தேதி முதல் வழக்கம் போல செயல்படும்

திருநெல்வேலி முதல் தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இந்த தேதி முதல் வழக்கம் போல செயல்படும்

By: vaithegi Thu, 09 Mar 2023 1:34:40 PM

திருநெல்வேலி முதல் தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இந்த தேதி முதல் வழக்கம் போல செயல்படும்

சென்னை: வாராந்திர சிறப்பு ரயில்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் வழக்கம் போல செயல்படும் ... இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு பொதுப் போக்குவரத்து ரயில்வே. ஏனென்றால், ரயில் போக்குவரத்து மிக குறைந்த விலையில் கிடைப்பதுடன் பயண நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் உதவியுடன் இந்தியாவின் பல பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து தெற்கு மார்க்கமாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவைகளை மீண்டும் துவங்க இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது.

special train,tirunelveli,tambaram ,சிறப்பு ரயில்,திருநெல்வேலி ,தாம்பரம்

அதாவது, தென் மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களை ஏப்ரல் 2- ஆம் தேதி முதல் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து இந்த சேவைகள் ஜூன் மாதம் வரை வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்கள் திருநெல்வேலியில் இருந்து தென்காசி மார்க்கமாக தாம்பரம் வரை இயக்கப்படும் .

Tags :