Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி ஏழுமலையான் தரிசன கட்டண சேவை டிக்கெட்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் ...தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் தரிசன கட்டண சேவை டிக்கெட்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் ...தேவஸ்தானம் அறிவிப்பு

By: vaithegi Sun, 26 June 2022 12:22:21 PM

திருப்பதி ஏழுமலையான் தரிசன கட்டண சேவை டிக்கெட்களை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம் ...தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி : கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அனைத்து கட்டண சேவைகளும் துவங்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான டிக்கெட் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்டுகளையும் பக்தர்கள் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை அஷ்டதள பாத பத்மாராதனை போன்றவைகளுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

online,temple,paid service ticket ,ஆன்லைன் ,தேவஸ்தானம் ,கட்டண சேவை டிக்கெட்

மேலும் ,சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான முன்பதிவு டிக்கெட்களையும் நாளை காலை 10 மணி முதல் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்த பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது. அந்த பக்தர்கள் மட்டும் உரிய பணத்தை செலுத்தி ஆன்லைன் மூலமாக டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|