Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் ஆன்லைன் தரிசன டிக்கெட் முடிவு

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் ஆன்லைன் தரிசன டிக்கெட் முடிவு

By: vaithegi Fri, 17 June 2022 7:07:38 PM

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் ஆன்லைன் தரிசன டிக்கெட்  முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுஎன்பது வழக்கமாக இருந்து வருகிறது. கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எப்போதும் சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு 100 பக்தர்கள் வரைக்கும்தான் வருவது வழக்கம். ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு சென்னையில் இருந்து மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என தகவல் தெரியவந்துள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பெரும் அவதி கொண்டிருக்கின்றனர். மேலும், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட தூரத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட சுவாமி தரிசனம் செய்யவே 10 முதல் 20 மணி நேரம் வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

நேற்று மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 76,425 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 36 ஆயிரத்து 53 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

tickets,devotees,tirupati ezhumalayan ,டிக்கெட்  ,பக்தர்கள் ,திருப்பதி ஏழுமலையான்

மேலும், நேற்று ஒரே நாளில் ரூபாய் 4.15 கோடி அளவுக்கு உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். கோடை விடுமுறை முடியும் வரைக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் டிக்கெட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பே வெளியிடப்படும்.

அதைப்போல, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் டிக்கெட் வெளியான சில மணிநேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் முற்றிலும் விற்பனையாகி விட்டது.

இதனால் பக்தர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர். இதனால், தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags :