Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூரிய கிரகணத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் 13½ மணிநேரம் மூடப்படும்

சூரிய கிரகணத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் 13½ மணிநேரம் மூடப்படும்

By: Karunakaran Mon, 15 June 2020 11:27:23 AM

சூரிய கிரகணத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் 13½ மணிநேரம் மூடப்படும்

கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆகம பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலமாக குறைகள் கேட்கும் முகாம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ரூ.300 டிக்கெட் பக்தர்கள் முன்கூட்டியே திருமலைக்கு வந்து அவதிப்பட வேண்டாம் எனவும், தரிசன நேரத்துக்கு வந்து ஏழுமலையானை வழிபடலாம் எனவும் கூறினார். 8-ந்தேதியில் இருந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

solar eclipse,tirupati,ezumalayayan,sami vision ,சூரிய கிரகணம்,ஏழுமலையான் கோவில்,திருப்பதி,சாமி தரிசனம்

மேலும் அவர், 21-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வதால், முன்கூட்டியே 21-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும் எனவும், 13½ மணிநேரம் கோவில் மூடப்படுவதால் பக்தர்களுக்கான சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவர், அதன்பின் தண்ணீரால் சுத்தம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும்10 வயதுக்குட்பட்டோருக்கு சாமி தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள் தங்களுக்கு சாமி தரிசனம் செய்ய வருவதற்கான தேதியை மாற்றி வழங்கும் படி கேட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :