Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா .. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதிகாரி முக்கிய தகவல்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா .. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதிகாரி முக்கிய தகவல்

By: vaithegi Tue, 29 Nov 2022 7:55:19 PM

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா   ..   லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதிகாரி முக்கிய தகவல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

எனவே அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழாவானது கடந்த 27ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் கலந்து கொள்வார்கள்.

thiruvannamalai,deepa festival ,திருவண்ணாமலை ,தீப திருவிழா

அதனால் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் இந்த திருவிழாவை கொண்டாட மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக எஸ்.பி.கார்த்திகேயன் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags :