Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ...TN SPORTS செயலி

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ...TN SPORTS செயலி

By: vaithegi Wed, 06 July 2022 2:31:39 PM

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ...TN SPORTS  செயலி

தமிழகம் : தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவது போல விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக TN SPORTS என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியின் மூலமாகவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளின் விவரங்கள், பயிற்சி முகாம் குறித்த விவரங்கள், விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு விவரங்கள் என விளையாட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.

school,college,operator ,பள்ளி, கல்லூரி ,செயலி

மேலும், TN SPORTS செயலி மூலமாகவே விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை digilocker மூலமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களையும் பெற மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் முன்பாகவே தங்களது விவரங்கள் அனைத்தையும் TN SPORTS செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து, TN SPORTS செயலியில் இணைய விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருமே https://www.tnsports.org.in/webapp/login.aspx என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|