Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

By: vaithegi Sat, 25 Mar 2023 10:31:16 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு


சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.எனவே அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது.

10-ம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படைக் கல்வித் தகுதியாகக் கொண்ட இத்தேர்வில் 18.36 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக குரூப்-4 தேர்வு முடிவுகள் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும். ஆனால், கடந்தாண்டுகளைவிட அதிக அளவிலான தேர்வர்கள் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களால் இம்முறை தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

group-4 exam results,tnpsc ,குரூப்-4 தேர்வு முடிவுகள் ,டிஎன்பிஎஸ்சி


இதன் இடையே, குரூப்-4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7,301-ல்இருந்து 10,117-ஆக உயர்த்தப்பட்டது. இது தேர்வர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டுமென பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதையடுத்து, குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்தது.

எனவே அதன்படி, சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான தேர்வர்கள் முடிவுகளை அறிய முற்பட்டதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது. இதனால் தேர்வர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், கட்-ஆஃப் அதிகரித்துள்ளது.

Tags :