Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் ... டிஎன்பிஎஸ்சி தெரிவிப்பு

குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் ... டிஎன்பிஎஸ்சி தெரிவிப்பு

By: vaithegi Fri, 28 Oct 2022 7:04:47 PM

குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் ...  டிஎன்பிஎஸ்சி தெரிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் ..... டிஎன்பிஎஸ்சி முடிவுகள் பற்றி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA (தொகுதி-II/IIA) இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது.

இதன் இடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பலகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

tnpsc exam results ,டிஎன்பிஎஸ்சி,தேர்வு முடிவுகள்

இதைத் தொடர்ந்து மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அந்த பணி நிறைவுற்ற பின் மேற்படித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக செய்தி/சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை (www.tnpsc.gov.in) மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :