Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியீடு

குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியீடு

By: vaithegi Fri, 01 Sept 2023 3:28:19 PM

குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியீடு

சென்னை: தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

இதனை அடுத்து நடப்பு ஆண்டு 32 காலிப்பணியிடங்களை கொண்ட TNPSC குரூப் 1 முதல் நிலை தேர்வு 2023 நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

அதை தொடர்ந்து முதன்மை தேர்வு 2024 ஜூலை மாதமும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாக அனைவரும் எதிர்பார்த்து வந்த குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

tnpsc,group 1,group 4 ,TNPSC ,குரூப் 1 ,குரூப் 4

அதாவது கிராம நிர்வாக அலுவலர் (VAO), தட்டச்சர், ஸ்டேனோ டைபிஸ்ட், இளங்கலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் நவம்பரில் வெளியாகும்.

எனவே அதன் தொடர்ச்சியாக விண்ணப்பபதிவு நடைமுறைகள் முடிவடைந்து தேர்வானது 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் தேர்வாணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :
|