Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி இணையதளம்

புதிய பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி இணையதளம்

By: Monisha Thu, 05 Nov 2020 2:52:43 PM

புதிய பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி இணையதளம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புது வடிவம் பெற்றுள்ள இந்த இணையதளத்தில் பல்வேறு புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. புதுப்பிக்கப்பட்ட புதிய தகவல்கள் அடங்கிய இந்த இணையதளத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் www.tnpsc.gov.in என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.

பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள, இந்திய அரசு நெறிமுறைகளை பின்பற்றி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

tnpsc,website,language,information,applicants ,டி.என்.பி.எஸ்.சி,இணையதளம்,மொழி,தகவல்கள்,விண்ணப்பதாரர்கள்

விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு வழியாக தேர்வு 'தகவல் பலகை' என்ற பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்வை குறைபாடு உள்ளவர்களும் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அவர்களே எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags :
|