Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளிவத்துள்ளது

TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளிவத்துள்ளது

By: vaithegi Sun, 12 June 2022 6:57:28 PM

TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளிவத்துள்ளது

தமிழகம் : தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் ஒவ்வொரு துறை சார்ந்த போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் காவல் துறையில் உள்ள காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்தது. 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்த SI தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு SI தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு செயல்முறையானது, எழுத்துத் தேர்வு ஆகியவற்றை கொண்டிருக்கும். தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 7ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தேர்வுக்கூட அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் விண்ணப்ப எண்னை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
முகப்புப் பக்கத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு என்பதை கிளிக் செய்து, பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளீட்டு உள்நுழைய வேண்டும்.
தேர்வுக்கான அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும்.
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் தேர்வின் போது கட்டாயம் அனுமதிச் சீட்டை எடுத்து வர வேண்டும்.

மேலும், அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேர்வாரணயம் தெரிவித்துள்ளது.

Tags :
|