Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிதாக 1000 பேருந்துகள் வாங்க, தமிழக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

புதிதாக 1000 பேருந்துகள் வாங்க, தமிழக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

By: vaithegi Mon, 20 Mar 2023 12:08:07 PM

புதிதாக 1000 பேருந்துகள் வாங்க, தமிழக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சென்னை: 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்ததும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

இதனை அடுத்து அப்போது, திராவிட இயக்க முன்னோடிகளின் வழிகாட்டுதலின்படி திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு வருகிறது. முதலமைச்சர் தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்தால் சிறப்பாக பணியாற்ற முடிகிறது; எனவே அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

budget,buses , பட்ஜெட்,பேருந்துகள்

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர், கடும் நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறையை ரூ. 30,000 கோடியாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்விக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி: தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை மிதான அறிவிப்பில், தமிழக போக்குவரத்து துறைக்கு 8 ஆயிரத்து 56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதிலும் குறிப்பாக தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 1000 பேருந்துகள் வாங்க, தமிழக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக நிதி அமைச்சர் கூறியுள்ளார். வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

Tags :
|