Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை 3 மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய முடிவு

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை 3 மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய முடிவு

By: vaithegi Thu, 13 July 2023 11:59:31 AM

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை 3 மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய முடிவு

இந்தியா: வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி விலை உயர்ந்து உள்ளதால் 3 மாநிலங்களிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு .. இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான கனமழை பெய்து கொண்டு வருகிறது.

அதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. பல மாநில அரசுகள் தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது.

central government,procurement ,மத்திய அரசு,கொள்முதல்

இதையடுத்து இந்நிலையில் மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த 3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. எனவே அதன் படி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் இனி வரும் நாட்களில் நாசிக், அவுரங்காபாத், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் தக்காளி அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனவே கூடுதல் தக்காளிகள் அனுப்பப்பட்டு இருப்பதால் கூடிய விரைவில் விலை குறையும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Tags :