Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னாள் எம்.பி, வலியுறுத்தல்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னாள் எம்.பி, வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 13 July 2020 5:05:49 PM

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னாள் எம்.பி, வலியுறுத்தல்

முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்... இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுதந்திரமான செயற்பட ஆவன செய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா பாலமோட்டை கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரிவித்ததாவது:

தமிழ் மக்களுக்கு அதிலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. யுத்தத்தினால் இழந்து போன எங்கள் பிரதேசத்தினை மீள் கட்டியெழுப்ப பாரியளவில் நிதியுதவி தேவைப்படுகின்றது. அத்துடன் கடந்த 30 வருடமாக தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாமல் உள்ள அரசியல் ரீதியான பிரச்சனையும் தீர்க்கப்படவேண்டிய தேவை உள்ளது.

responsibility,government,journalist,security,former mp ,
பொறுப்பு, அரசாங்கம், ஊடகவியலாளர், பாதுகாப்பு, முன்னாள் எம்.பி.,

இந்த முக்கிய பிரச்சனைகளுக்காவே கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள். ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் நீதியை பெற்றுகொடுக்க வேண்டியவர்கள் அரசாங்கத்திற்கு விலைபோய் முண்டு கொடுத்த நிலைமைதான் தொடர்ந்துகொண்டிருந்தது.

ஆகவே இந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தமக்கு உறுதியான தலைமைத்துவம் தேவை என்பதனை உணர்ந்துள்ளனர். அதற்கான அரசியல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவினை வழங்க வேண்டும்.

அத்துடன் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றது. அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தரினால் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டு அவருடைய புகைப்பட கருவியும் பறிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் ஊடகவியலாளர்களையும் ஊடங்களையும் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது” எனவும் தெரிவித்தார்,

Tags :