Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரிசோதனையை விரைவுப்படுத்த ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது

கொரோனா பரிசோதனையை விரைவுப்படுத்த ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது

By: Nagaraj Sat, 09 May 2020 2:46:46 PM

கொரோனா பரிசோதனையை விரைவுப்படுத்த ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது

கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்துவதற்காக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க தென் கொரியாவிடம் தமிழக அரசு கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளது.

கொரோனா பாதிப்பை உறுதி செய்ய பிசிஆர் கருவிகளை பயன்படுத்தும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள 1.20 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் மூலம் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

purchase order,south korea,10 lakhs pcr,government of tamil nadu ,கொள்முதல் ஆணை, தென்கொரியா, 10 லட்சம் பிசிஆர், தமிழக அரசு

இந்நிலையில், கொரோனா பரிசோதனையை மேலும் விரைவுபடுத்தும் வகையில், தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்துள்ளன. இந்த கருவிகள் விரைவில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பரிசோதனைக்காக கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க தென் கொரியாவிடம் தமிழக அரசு கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags :