Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வார இறுதியில் ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியில் ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Fri, 06 Oct 2023 09:55:02 AM

வார இறுதியில் ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சென்னையிலிருந்து 300 பேருந்துகளும் கோவை ,நெல்லை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து 300 பேருந்துகளும் இயக்கம் ...வார இறுதி நாட்களையொட்டி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

special buses,transportation ,சிறப்பு பேருந்துகள் ,போக்குவரத்து

இதனை அடுத்து கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags :