Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

By: vaithegi Sat, 12 Nov 2022 11:39:14 AM

இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ...... தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. அதையடுத்து வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை இந்த பணி நடைபெறுகிறது.

இதையடுத்து இந்த காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.

special camp,electoral roll ,சிறப்பு முகாம், வாக்காளர் பட்டியல்

இதன்இடையில், பணிக்குச்செல்வோர் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இந்த பணியை மேற்கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :