Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம்

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம்

By: vaithegi Mon, 11 Sept 2023 09:48:07 AM

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.

மேலும் அத்துடன் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்ட் 18.19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

consultative meeting,chief minister m.k.stalin,womens rights project ,ஆலோசனைக் கூட்டம்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மகளிர் உரிமை திட்டம்


இச்சூழலில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாளில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ தொடங்கப்படவுள்ளது . எனவே இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.வருகிற செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படவுள்ளது. பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.

Tags :