Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 50 சதவீதம் குறைவு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 50 சதவீதம் குறைவு

By: vaithegi Mon, 04 July 2022 9:34:52 PM

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 50 சதவீதம் குறைவு

மும்பை: மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 50 சதவீதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மராட்டியத்தில் தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்தது வந்தது .

இந்நிலையில், தொற்று பாதிப்பு இன்று 1,515- ஆக குறைந்துள்ளது. மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 86 ஆயிரத்து 811- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.

corona,casualties ,கொரோனா ,உயிரிழந்தவர்கள்

மராட்டியத்தில் நேற்று மட்டும் 2,962- பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று பாதிப்பு அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழப்பு 3 ஆக குறைந்துள்ளது. தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு 431 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து 2,062- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 21,935 ஆக உள்ளது. மும்பையில் அதிகபட்சமாக 7,040- பேரும், புனேவில் 5,221 பேரும் , தானே மாவட்டத்தில் 4,605- பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

Tags :
|