Advertisement

புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

By: vaithegi Fri, 10 Feb 2023 09:31:09 AM

புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி : புதுவையில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .... புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் செடல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழாவை காண புதுவையில் இருந்து மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இதையடுத்து நடப்பு ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 2-ம் தேதி முதல் தொடங்கியது.அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகங்கள் நடந்து கொண்டு வருகிறது.

மேலும் முக்கிய வீதிகளில் அம்மன் வீதி உலாவும் சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று அம்மனின் முத்து பல்லாக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக முக்கிய நிகழ்வான இன்று செடல் திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது புதுவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த செடல் திருவிழாவை முன்னிட்டு இன்று புதுவையில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :