Advertisement

இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

By: vaithegi Mon, 08 Aug 2022 09:06:28 AM

இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

இடுக்கி: கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன.

இதனை தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 5-ந்தேதி மூணாறு அருகே உள்ள குண்டலை புதுக்கடி என்னுமிடத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.

vacation,tongs ,விடுமுறை , இடுக்கி

மேலும் அங்கு மலை உச்சியில் மண், கற்கள் உருண்டு வந்து விழுந்ததில் கோவில், 2 கடைகள் மற்றும் ஒரு ஆட்டோ மண்ணுக்குள் புதைந்தன. இதையடுத்து சீரமைப்பு பணி மிக தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (8.8.2022) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜீபா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :