Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Mon, 17 July 2023 09:50:56 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்[பட்டுள்ளதாவது , “ராமநாதபுரம் மாவட்டமானது அதிகப்படியான புண்ணிய ஸ்தலங்களையும் சுற்றுலா இடங்களையும் கொண்டு உள்ளது.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் ஆடி அமாவாசை பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பக்தர்கள் வருகை தருவார்கள்.

holiday,ramanathapuram ,விடுமுறை,ராமநாதபுரம்

இதையடுத்து இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் சேதுக்கரை, தேவிப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு சென்று தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பார்கள். இதனைத் தொடர்ந்து, போதிய பேருந்து வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் காரணமாக மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 17ம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும், இந்த அமாவாசை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 22.07.2023 சனிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது” எனஅதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :