Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்று ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sat, 04 Feb 2023 09:35:21 AM

இன்று  ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .... குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

எனவே இதன் காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

heavy rain,school,colleges , கனமழை,பள்ளி, கல்லூரிகள்

இதையடுத்து அதேபோன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது . மேலும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரகள் உத்தரவு பிறப்பித்துள்ளார். தஞ்சையில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோன்று கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|