Advertisement

கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 23 Nov 2023 09:45:21 AM

கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை:தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

இதையடுத்து இந்த சூழலில் கோவையில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

holiday,monsoon,meteorological center ,விடுமுறை,தொடர் மழை,வானிலை மையம்

கனமழையால் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர் , நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போன்று செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.

Tags :