Advertisement

மேகாலயாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Tue, 25 Oct 2022 12:15:08 PM

மேகாலயாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

மேகாலயா: பள்ளிகளுக்கு விடுமுறை .... வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘சிட்ராங்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிட்ராங் புயல் இன்று டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்த புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதே போன்று வட மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரம், திரிபுராவிலும் புயலின் தாக்கம் இருந்து கொண்டு வருகிறது.

holiday,meghalaya ,விடுமுறை ,மேகாலயா

இதையடுத்து மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் இன்று (அக்.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேகாலயாவின் பல்வேறு பகுதிகளில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.a

Tags :