Advertisement

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

By: vaithegi Fri, 03 Feb 2023 10:40:22 AM

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகை: மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .... வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று காலை நிலவக்கூடும்.

எனவே இதன் காரணமாக,இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :