Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மயிலாடுதுறையில் இந்த தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மயிலாடுதுறையில் இந்த தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

By: vaithegi Tue, 15 Nov 2022 09:51:35 AM

மயிலாடுதுறையில் இந்த  தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சீர்காழி: பள்ளிகளுக்கு விடுமுறை . ..... சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது. சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

holiday,mayiladuthurai ,விடுமுறை,மயிலாடுதுறை

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர்.

இதையடுத்து இந்த நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டடத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Tags :