Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலூர் , ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பு

வேலூர் , ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பு

By: vaithegi Tue, 26 Sept 2023 10:34:59 AM

வேலூர் , ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பு

சென்னை: தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .... வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

holiday,vellore,ranipet ,விடுமுறை , வேலூர் , ராணிப்பேட்டை


இந்த நிலையில் இராணிப்பேட்டையில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று வேலூரிலும் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளார்.

Tags :