Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகப்பட்டினம் வட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை

நாகப்பட்டினம் வட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 05 July 2023 09:57:16 AM

நாகப்பட்டினம் வட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் கிராமத்தில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் அமைந்து உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் 7-வது படைவீடாகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்து உள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும்.

சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் குடமுழுக்கு இன்று மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

local holiday,nagapattinam , உள்ளூர் விடுமுறை,நாகப்பட்டினம்


இந்த நிலையில் சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில், குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால் நாகை வட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதனை அடுத்து இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூலை 8ம் தேதி வேளை நாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :