Advertisement

இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Fri, 08 Sept 2023 10:42:12 AM

இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்திற்கு உள்ளூர் விடுமுறை ... நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னையின் ஆலயம் அமைந்து உள்ளது. இதனை அடுத்து இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.

இதையடுத்து அதன்படி ஆகஸ்ட் 29-ம் தேதி ஆரோக்கிய அன்னையின் புனித கொடி ஏற்றப்பட்டது. எனவே இதன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களிலிருந்தும், நாடுகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு படையெடுத்தனர். மேலும் அத்துடன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

local holiday,nagapattinam ,உள்ளூர் விடுமுறை ,நாகப்பட்டினம்


இந்த நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி இன்று நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

நேற்றிரவு அன்னையின் தேர்பவனி, 8ம் தேதியான இன்று மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே விடுமுறை தினத்தை ஈடுசெய்ய வருகிற 23ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :