Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 19 Apr 2023 10:31:08 AM

திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்ட நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த தேரோட்டத்தை பார்ப்பதற்காக பல மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் வருகை தருகிறார்கள்.

எனவே, இதனை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி அரசு அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் அறிவித்துள்ளார்.

local holiday,trichy , உள்ளூர் விடுமுறை ,திருச்சி

ஏற்கனவே, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த விடுமுறை அறிவிப்பு தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பொருந்தாது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக முறையை ஏப்ரல் 29, மே 13 ஆகிய தேதிகளில் பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :