Advertisement

தஞ்சாவூரில் இன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 03 Nov 2022 11:06:45 AM

தஞ்சாவூரில் இன்று  உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் : இன்று உள்ளூர் விடுமுறை ..... தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கியது. இதையடுத்து இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது . சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட பெரிய கோவில் அருகே இருக்கும் பாலம் உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் தஞ்சை நகரமே விழா கோலம் கொண்டிருக்கிறது.

local holiday,thanjavur ,உள்ளூர் விடுமுறை,தஞ்சாவூர்


இதனையடுத்து இந்த ஆண்டு சதய விழா 2 தினங்கள் கொண்டாடப்படுகிறது. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று 2-வது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று 3-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1010 ஆம் ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார் ராஜராஜ சோழன். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. ஐப்பசி மாதம் சதய தினத்தன்று பிறந்தவர் ராஜராஜ சோழன் . தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags :