Advertisement

திருநள்ளாறில் இன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 30 May 2023 09:35:49 AM

திருநள்ளாறில் இன்று உள்ளூர் விடுமுறை

திருநள்ளாறு : இன்று திருநள்ளாறு நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு ...

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது. உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம், இங்கு வரும் பக்தர்கள் நளன்குளத்தில் நீராடிய பின் யாசகர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி தங்களின் தோஷ நிவர்த்தி செய்து விட்டு சனீஸ்வர பகவானை தரிசிப்பது வழக்கமான ஒன்று ஆகும்.

அதிலும் குறிப்பாக சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான மக்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

local holiday,thirunallar , உள்ளூர் விடுமுறை ,திருநள்ளாறு

இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிர மோற்சவ விழாவும் நடை பெற்று கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று தேரோட்டம் நிகழ்ச்சியும், ஜூன் 1-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு, சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறவுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருநள்ளாறு, நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டு உள்ளது

Tags :