Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும் பல இடங்களில் வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

இன்றும் பல இடங்களில் வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

By: vaithegi Tue, 16 May 2023 09:24:31 AM

இன்றும் பல இடங்களில் வெயில் இயல்பை விட  அதிகமாக இருக்கக்கூடும்

சென்னை: தமிழகத்தில் இன்றும் பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், 'இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும்' எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது'மோக்கா' புயல் கரையைக் கடந்தாலும், மேற்கு திசை காற்றும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19-ந் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை ஆறுதலை கொடுக்கும் வகையில் இன்னொரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அதாவது 16-ந் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

sun,temperature ,வெயில் ,வெப்பநிலை

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுயிருக்கிறது.

Tags :
|